இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்; திரையுலகினர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி
சென்னை: மறைந்த இயக்குனர் பாக்யராஜின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ், 73, மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், ரஜினி, கமல், தனுஷ், சிவகார்த்திகேயன், சிவகுமார், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன் , அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், வினோத மலையாள நடிகர்கள் மம்முட்டி, திலீப் உள்ளிட்ட பல திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.
பாக்யராஜ் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடக்கும் என முதல்வர் விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து பாக்யராஜ் உடல் வெளியே கொண்டு வரப்பட்ட போது போலீசார் மரியாதை செய்தனர்.
தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலம் காலை 9 மணியளவில் துவங்கியது. வள்ளுவர் கோட்டம் சிக்னல், கோடம்பாக்கம் ஹைவே வழியாக ஆர்கே சாலை, காமராஜர் சாலை வழியாக ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்று இறுதியாக பெசன்ட் நகர் மின்மயானம் வந்து அடைந்தது.
உடல் தகனம்
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன் பாக்யராஜ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிறகு, பாக்யராஜ் உடல் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக பாக்யராஜின் உடலை வீட்டில் இருந்து வாகனம் வரை பார்த்திபன், சரத்குமார் ஆகியோர் தோளில் சுமந்து வந்தனர்.
வாசகர் கருத்து (22)
M Ramachandran - Chennai,இந்தியா
28 ஜூன்,2026 - 14:05 Report Abuse
மனித பிறவி எடுத்தால் இறப்பு என்பது நிச்சயம். இது நமது இதி காசங்க்கள் எடுத்து கூறியிருக்கிறது. அது கடவுளானாலும் இந்த விதி நிச்சயம். உதாரண புருஷர்கள் யாவரும் நிரூபித்து சென்றிருக்கிறார்கள். ராக வேந்திரர், ஸ்ரீ ராமன், ஸ்ரீ கிருஷ்ணர் கடவுள் மனித அவதாரம் எடுத்து நிரூபித்திருக்கிறார்கள். அவரவர்கள் செய்த தீவினைகிக்கேற்ப கஷ்டங்கள் அனுபவித்தே தீர வேண்டும். கடையசி காலத்தில் நமக்கு வியாதிகள் வரும் போது வரலாம். எந்த மருத்துவமும் வேலை செய்யாது. மனதிற்கு நம் மரணம் நெருங்கி விட்டதை உணரும். நாம் மனோ தைரியத்தை இழக்க கூடாது. நாம் பிறந்த பயன் முடிந்து விட்டதை சாதாரண மரணம் உணர்த்தி விடும். அது தான் ஹிந்து தர்மம் எல்லாத்தியும் விட சிறந்த தாக்கா கருத படுகிறது. ஹிந்து மாதத்தில் மன்னிப்பு என்பது கிடையாது. செய்த தீவனைக்கு அனுபவித்தே தீர வேண்டும். 0
0
Reply
renga rajan - ,இந்தியா
28 ஜூன்,2026 - 14:02 Report Abuse
அரசு மரியாதை. வெட்கம். அரசு மரியாதைக்கு ஒரு மரியாதை இல்லை. 0
0
Reply
Nancy - ,
28 ஜூன்,2026 - 12:32 Report Abuse
0
0
Reply
முத்து மாணிக்கம் விருது நகர் - ,
28 ஜூன்,2026 - 12:20 Report Abuse
சினிமா பைத்தியங்கள்
நிறைந்த தமிழ்நாடு 0
0
Reply
முத்து மாணிக்கம் விருது நகர் - ,
28 ஜூன்,2026 - 12:09 Report Abuse
அரசு மரியாதையுடன் இறுதி அடக்கம் 0
0
Reply
அம்பி குமார் பாலக்காடு - ,
28 ஜூன்,2026 - 12:02 Report Abuse
நடிகனுக்கு எதற்கு அரசு மரியாதையுடன் அடக்கம் ?? அவர் நாட்டுக்காக போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா ?? ஒரு சினிமா நடிகர் !! அவ்வளவு தான் !! சினிமா நடிகர்க்கு அரசு மரியாதையுடன் அடக்கமா ?? மக்களின் உயிரை காப்பாற்றும் டாக்டர் இறந்தால் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யுமா அரசு ?? நோயாளிகளுக்கு தினமும் மருந்து கொடுத்து ஊசி போட்டு நோயாளிகளை காப்பாற்றும் நர்ஸ் இறந்தால் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யுமா அரசு ?? சினிமா நடிகனுக்கும் டைரக்டர்க்கும் சாவுக்கு எதற்கு அரசு மரியாதையுடன் அடக்கம் ?? நம் நாட்டுக்காக போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்த தியாகியா ?? ஒரு சினிமா நடிகர் !! அவ்வளவு தான் !! 0
0
krish - ,
28 ஜூன்,2026 - 13:40Report Abuse
நம்ம சின்ன தத்தியை பத்தி சொல்றார் 0
0
krish - ,
28 ஜூன்,2026 - 13:41Report Abuse
குமாருக்கு எவளோ பேரு வருவாங்க தெரியலையே 0
0
Reply
Sreenivas Jeyaraman - Madurai,இந்தியா
28 ஜூன்,2026 - 11:27 Report Abuse
சினிமா அரசியல் இதில் உள்ளவர்களே மனிதர்கள்... சாமான்ய மக்களில் பலரும் தன் வீட்டைத்தாண்டி பெரும் சேவை புரிந்தாலும் எந்த புகழாரமோ மரியாதையோ கிடைக்காது என்பதே இன்றைய விதி...
பலரையும் நையாண்டி கேலி ...தனி மனித ஒழுக்கம் ...என சுயக்கட்டுபாடு இல்லாத எவரையும் ..கண்டு கொள்ளாதிருத்தலே வரும் சமுதாயம் ஒழுக்கத்துடன் இருக்க வழியாகும். சிந்திப்போம்... ஒழுக்கத்தை பேணுவோம்... 0
0
Reply
வெற்றி - வடக்கர்,இந்தியா
28 ஜூன்,2026 - 11:13 Report Abuse
இவரது மறைவிற்கு வருந்துகிறோம். அதே சமயம் .....தமிழ்நாட்டில் பிறந்து 1800 க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சை செய்த ஒரு மருத்துவர் அதில் 500 கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சை பணம் வாங்காமல் செய்தார் இறந்த போது உடன் சென்றது 15 பேர் மட்டுமே.. அரசியல் வாதிகளும் கண்டு கொள்ளவில்லை , ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. அரசு மரியாதை எல்லாம்.... புகழும் , சினிமாக்காரனுக்கும் மட்டும் தானோ என்னமோ ? இவர்களது மட்டும் தான் உயிர் , மற்றவர்களது எல்லாம் ........ 0
0
Reply
Nancy - ,
28 ஜூன்,2026 - 11:07 Report Abuse
0
0
Reply
R Vijayaraghavan - New Delhi,இந்தியா
28 ஜூன்,2026 - 11:02 Report Abuse
இனிமேல் தமிழ் நாட்டில் சினிமா துறையை சேர்ந்த யார் இறந்தாலும் தமிழ அரசின் முழு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவார் 0
0
Reply
மேலும் 10 கருத்துக்கள்...
மேலும்
-
மகசூல் நிலையை எட்டிய கோடை நெல் சாகுபடி
-
பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்; 4 ராணுவ வீரர்கள் பலி
-
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை காய்கறி விலை நிலவரம்
-
இன்றயை நிகழ்ச்சி(29.6.2026)
-
சீசெல்ஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு
-
யூடியூப் வீடியோ உதவியுடன் பிரசவம் பார்த்த பெண் உயிரிழப்பு
Advertisement
Advertisement