மகசூல் நிலையை எட்டிய கோடை நெல் சாகுபடி
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட கொத்தியார் கோட்டை, பால்குளம், காவனுார், துத்தியேந்தல், அத்தானுார், மங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்தனர். சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடை நெல் பயிர்களுக்கு அப்பகுதியில் உள்ள கண்மாய்களில் இருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டு, சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
அவ்வப்போது பெய்த கோடை மழையும், கோடை நெல் சாகுபடிக்கு கை கொடுத்ததைத் தொடர்ந்து, தற்போது கோடை நெல் விவசாயம் மகசூல் நிலையை எட்டி உள்ளன. மகசூல் நிலையை எட்டியதை தொடர்ந்து, விவசாயிகள் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement