சீசெல்ஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு
நமது நிருபர்
சீசெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான 'கார்டியன் ஆப் தி ப்ளூ ஹொரைசன்' (Guardian of the Blue Horizon) பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.
உயரிய விருது
மேலும், இந்திய வம்சாவழியினரும் பிரதமர் மோடியை இந்திய பாரம்பரிய நடனங்களில் ஒன்றான குட்ச் நடனமாடி ஆராவாரமாக வரவேற்றனர். இந்நிலையில் இன்று சீசெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான 'கார்டியன் ஆப் தி ப்ளூ ஹொரைசன்' (Guardian of the Blue Horizon) பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.
நிலையான வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் நீண்டகால முயற்சிகளையும், அவரது பசுமை சார்ந்த தொலைநோக்குப் பார்வையையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. சீசெல்ஸ் அதிபர் பேட்ரிக்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஒப்பந்தம்
பாதுகாப்பு, விவசாயம், நிதி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா, சீசெல்ஸ் ஆகிய இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகின. பிறகு நிருபர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா, சீசெல்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு இருப்பது, ஆப்பிரிக்காவுடன் தனது உறவை வலுப்படுத்த உதவும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
@block_G@
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எனக்கு மிக உயரிய விருதான 'கார்டியன் ஆப் தி ப்ளூ ஹொரைசன்'வழங்கியதற்காக, சீசெல்ஸ் மக்களுக்கும் அரசிற்கும், அதிபர் ஹெர்மினிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை நான் பணிவுடனும், மரியாதையுடனும் ஏற்றுக்கொள்கிறேன். பருவநிலை மாற்றத்தின் சவால்களுக்கு எதிராகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், வருங்கால சந்ததியினருக்கான தங்கள் கடமையாக கருதும் அனைத்து நாடுகளுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்.இது நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெல்ல வேண்டிய ஒரு சவாலாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.block_G