யூடியூப் வீடியோ உதவியுடன் பிரசவம் பார்த்த பெண் உயிரிழப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் யூடியூப் வீடியோ உதவியுடன் வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தளவாய்பாளையத்தை சேர்ந்தவர் சசிகலா. கர்ப்பிணியான இவர் யூடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அவருக்கு கணவர் மற்றும் குடும்பத்தினர் உதவியாக இருந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் சசிகலாவுக்கு குழந்தை பிறந்தது. எனினும் ரத்தப்போக்கு நிற்கவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அதன் பிறகு அவசரம் அவசரமாக கோவை தனியார் மருத்துவமனையில் சசிகலாவை கொண்டு வந்து சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் நஞ்சுக்கொடி வெளியேறாமல் இளம்பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது உயிரிழப்புக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால், 2வது குழந்தையை இயற்கையாகப் பெற கணவர், மாமியாருடன் சேர்ந்து தம்பதி எடுத்த முயற்சி விசாரணையில் தெரியவந்து உள்ளது. பிறந்த குழந்தை அரசு டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் தான் ஆகச்சிறந்த உண்மையான தற்குறிகள்!
எந்தவித பட்டம் தகுதியும் இல்லாத சிலர் தம்மை ஹீலர் என்றெல்லாம் கூறிக் கொண்டு தவறான தகவல்களுடன் மருத்துவ வீடியோக்களை போடுகின்றனர் வீட்டிலேயே பிரசவம் மட்டுமல்ல தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சாரமும் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களையெல்லாம் நிரந்தரமாக அகற்ற அரசு நடவடிக்கை எடுத்தேயாக வேண்டும்.
இறந்தது... பிரசவம் பார்த்த பெண்ணா ? அல்லது பார்க்கப்பட்ட பெண்ணா ?...
The life 2 child till grow ? father n relative support much more needed..