லண்டனில் இந்திய மாணவர் உயிரிழப்பு; உடலை மீட்க உதவி கோரும் பெற்றோர்
நமது நிருபர்
லண்டனில் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட இந்திய மாணவர் சடலமாகக் கண்டு எடுக்கப்பட்டார். உடலை மீட்க குடும்பத்தினர் அரசு உதவி கோரியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டம் தலமட்லா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவருக்கு வயது 25. லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன் லண்டன் சென்ற இவர் அங்கு விடுதியில் தங்கி படித்து வந்தார்.
கடந்த ஜூன் 22ம் தேதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஸ்ரீநாத் அன்று இரவு விடுதியில் உள்ள தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகசூல் நிலையை எட்டிய கோடை நெல் சாகுபடி
-
பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்; 4 ராணுவ வீரர்கள் பலி
-
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை காய்கறி விலை நிலவரம்
-
இன்றயை நிகழ்ச்சி(29.6.2026)
-
சீசெல்ஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு
-
யூடியூப் வீடியோ உதவியுடன் பிரசவம் பார்த்த பெண் உயிரிழப்பு
Advertisement
Advertisement