குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்

8



நமது நிருபர்




சென்னையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை முதல்வர் விஜய் துவங்கி வைத்தார்.

போலியோ சொட்டு மருந்து என்பது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கக் கொடுக்கப்படும் மிக முக்கியமான தடுப்பு மருந்து. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடந்து வருகின்றன.

52 லட்சத்து 91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் பள்ளியில் முதல்வர் விஜய் போலியோ சொட்டு மருந்து முகாமை துவங்கி வைத்தார். குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை முதல்வர் விஜய் வழங்கினார்.

அவர் குழந்தைகளுக்கு பொம்மையை பரிசாக வழங்கினார். மாலை 5 மணி வரை முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

Advertisement