ஜூன் கூட்டத்துக்கு மாநகராட்சி 'டிமிக்கி' 'போதிய தீர்மானம் இல்லையாம்'

ஈரோடு; ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் சாதாரண கூட்டம், ஒவ்வொரு மாதமும் , மாதத்தின் கடைசி வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் நடக்கும். கடந்த மாத கூட்டம், 26ம் தேதி நடந்தது.

இந்நிலையில் ஜூன் மாத கூட்டம் தொடர்பாக எவ்வித அறி-விப்பும் வெளியாகாமல் இருந்தது. கவுன்சிலர்கள், அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்களுக்கும் தெரியவில்லை. இதனால் கூட்டம் நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் நிலவியது. ஆனாலும் கடைசி இரண்டு நாட்களில் நடத்த வாய்ப்புள்ள-தாக கருதப்பட்டது. நேற்றும் கூட்டம் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் இம்மாத கூட்டம் நடக்காதது உறுதியா-கிவிட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கூட்டத்-துக்கு முன்மொழிய வேண்டிய கூட்டப்பொருள் (தீர்மானம்) போதிய அளவில் இல்லாததால் கூட்டம் நடத்தவில்லை. ஆனால் அடுத்த மாத கூட்டம் முன்கூட்டியே நடக்கும். இவ்வாறு கூறினர்.

Advertisement