பூட்டை சாலையில் டிராபிக் ஜாம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

சங்கராபுரம்: சங்கராபுரம் பூட்டை சாலையில் தொடரும் டிராபிக் ஜாமால் வாகன ஓட்டிகள்,பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சங்கராபுரம் பூட்டை சாலையில் பஸ் நிலையம் உள்ளது. இந்த சாலையில் உள்ள கடைகள் முன்பு இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்கள் எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட முடியாமல் சாலையில் போக்குவரத்து தினசரி ஸ்தம்பிக்கிறது. போக்குவரத்தை சரி செய்ய போக்குவரத்து போலீசார் இல்லாததால் உள்ளுர் போலீசார் காலதாமதமாக வருகின்றனர்.

தினசரி பூட்டை ரோடில் ஏற்படும் டிராபிக் ஜாமால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்காமல் வாகன ஓட்டிகள் தங்கு தடையின்றி செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement