சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் ஆசிரியர்கள் கோரிக்கை
ராமநாதபுரம்: ஜூலை 4, 5 தேதிகளில் நடக்கும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பணிக்காலம், உயர்கல்வித் தகுதி ஆகியவற்றுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிவபாலன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மற்ற மாநிலங்களைப் போன்று தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும். ஆசிரியர்களின் பணிக்காலம் மற்றும் உயர்கல்வித் தகுதி ஆகியவற்றுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
மேலும் 2025ல் நடந்து முடிந்த ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்விலும் மதிப்பெண்கள் குறைக்க வேண்டும். குறிப்பாக மேற்கு வங்களாத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களின் கல்வித் தகுதி மற்றும் பணிக்காலம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தனி மதிப்பெண்கள், அதாவது 25 மதிப்பெண் எடுத்தால் போதுத் தேர்வில் வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலை உள்ளது. இந்த நடைமுறையை தமிழகத்திலும் அமல்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும் என்றார்.–––––