சங்கராபுரத்தில் மரவள்ளி சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சங்கராபுரம் பகுதியில் அரசம்பட்டு, பாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி, லக்கினாய்கன்பட்டி, முலக்காடு, நெடுமானுர், பொய்க்குனம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் முல்லுவாடி, குங்குமரோஸ், வெள்ளை தாய்லாந்து, கருப்பு தாய்லாந்து ஆகிய மரவள்ளி ரகங்களை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். 10 மாத பயிரான மரவள்ளி ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 டன் மகசூல் கிடைக்கும். அறுவடை சமயத்தில் ஆத்துார், சேலம் பகுதியை சேர்ந்த சேகோ பேக்டரி உரிமையாளர்கள் விவசாய நிலத்திற்கே வந்து 75 கிலோ முட்டை  500 ருபாய் வரை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

விவசாயிகளுக்கு செலுவு போக ஒரு ஏக்கருக்கு 10,000 வரை லாபம் கிடைக்கிறது. குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதால் சங்கராபுரம் பகுதி விவசாயிகள் மரவள்ளி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement