'ஒவ்வொரு பெண்ணும் சிங்கப்பெண்தான்'

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், சிங்கப்பெண் அதிரடி படை சார்பில், பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது.

முதல்வர் (பொ) செல்வம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர் சேகர், போதை பழக்கங்களால் ஏற்பட்ட குற்ற சம்பவங்களை எடுத்துக்காட்டாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சிங்கப்பெண் அதிரடி படை போலீசார், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், அதிரடிப்படையின் பணிகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர்.

சிங்கப்பெண் எஸ்.ஐ., பேபி பேசுகையில், நமக்கு நாமே பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ளுங்கள். நாங்கள் மட்டும் சிங்கப்பெண் அல்ல. நீங்கள் அனைவரும் சிங்கப்பெண்கள்தான். பெண்கள், குழந்தைகள் யாருக்கேனும் அநீதி நடக்கிறது என்றால், 1091 என்ற எண்ணில் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

Advertisement