இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக இயங்கும்; திருமா நம்பிக்கை

16

மதுரை: இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்பதை நான் பெரிதும் நம்புகிறேன் என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: முதல்வர் விஜய் ஜாதி அடையாளங்களை ஊக்கப்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை அவருடைய பேச்சில் இருந்து நம்மால் உணர முடிகிறது. அது தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே இடதுசாரிகள் விருப்பம் என்பதை அவர்கள் திரும்ப, திரும்ப உறுதிப்படுத்தி வருகிறார்கள். அதே நிலைப்பாட்டை தான் விடுதலை சிறுத்தைக்கட்சியும் கொண்டிருக்கிறது.

எனவே இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்பதை நான் பெரிதும் நம்புகிறேன். நாளை நடைபெறவுள்ள தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் விசிக பங்கேற்கும். நான், விசிக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்போம். அதிமுகவில் எம்எல்ஏக்களை பதவியை ராஜினாமா செய்பவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

அதிமுகவில் என்ன பிரச்னை, எதற்கு பதவி விலகுகிறீர்கள் என்று கேட்க வேண்டும். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றால், அதிமுகவிற்குள் நிகழும் உட்கட்சி முரண்கள் என்ன என்பதை தான் நீங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

தினமலர் நேரலை

மதுரையில் விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு


முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement