டிஜிட்டல் கிராப் சர்வேயில் பங்கேற்க விவசாயிகள், இளைஞர்களுக்கு அழைப்பு
தேனி:மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆக., 31 வரை நடைபெற உள்ள டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் 18 முதல் 45 வயதுடைய விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் பங்கேற்க வேளாண் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
துறை அலுவலர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் 109 வருவாய் கிராமங்களில் 4.93 லட்சம் சப்டிவிஷன்களில் பயிர் சாகுபடி உள்ளது. நடப்பு காரிப் பருவத்திற்கான டிஜிட்டல் கிராப் சர்வே பணிகள் இன்று முதல் ஆக.,31 வரை நடக்கிறது. அதில் கிராமப்புறத்தை சேர்ந்த ஆண்ட்ராய்டு அலைபேசி வைத்துள்ள 18 முதல் 43 வயதுடைய விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், கிராம வளர்ச்சி குழுவினர் பங்கேற்கலாம். தங்கள் பகுதியில் உள்ள சப்டிவிஷன்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் விபரங்களை அதற்கான செயலியில் போட்டோவுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தரிசு நில கணக்கெடுப்பிற்கு ரூ. 3, முக்கிய பயிர் கணக்கெடுப்பிற்கு ரூ.5, கூடுதல் பயிர் கணக்கெடுப்பிற்கு ரூ. 2என ஊக்கத்தொகை வழங்கப்படும். மலைப்பகுதி கிராமங்களில் ஒரு சர்வேக்கு ரூ. 10 ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
மேலும்
-
தவெக ஆட்சியை கவிழ்க்க 40 நாட்களாக முயற்சி: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
-
அரசு பஸ்கள் 'டிரிப் கட்': மலைப்பகுதி மக்கள் அவதி
-
துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி; கட்சிக் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு
-
தீ தடுப்பு மீட்பு பயிற்சி
-
ஒப்பந்தம் பெற பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்; அமைச்சர் ஆதவ் அறிவிப்பு
-
ஐரோப்பாவில் கோர தாண்டவமாடும் வெப்பஅலை; ஸ்பெயின், பிரான்சில் 2000 பேர் பலி