திருநங்கைகளுக்கு ஹாஸ்டல்: சமூக நலத்துறை நடவடிக்கை

கோவை: திருநங்கைகளுக்கு சென்னை, மதுரையில் ரூ.43 லட்சத்தில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டது போல், கோவையிலும் அமைக்கப்பட உள்ளது. இவ்விடுதியில் 25 பேர் வரை தங்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட, திருநங்கை நல வாரியம் வழங்கிய அடையாள அட்டை பெற்றவர்கள், குறைந்தபட்சம் ஒரு மாதம் முதல் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை தங்க முடியும்.

விடுதியில் இலவச உணவு, உடை, மனநல ஆலோசனை, தொழில் வழிகாட்டல், சட்ட உதவி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். குடும்பத்தினருடன் மீண்டும் இணையவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை தொடர தேவையான வழிகாட்டுதலும் அளிக்கப்படும். தன்னார்வ தொண்டு நிறுவனம் வாயிலாக விடுதி செயல்படுத்தப்பட உள்ளதாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement