அனைத்து வட்டாரங்களுக்கும் பண்ணைய திட்டம் தேவை
கம்பம்:தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களிலும் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் அமல்படுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டதில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் சில ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் ஆடு,மாடு, கோழிகள் வாங்கிட மானியம் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். இத் திட்டத்தில் ஒரு விவசாயிக்கு 10 ஆடுகள், 20 கோழிகள், ஒரு மாடு, மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் உள்ளிட்டவை ரூ.ஒரு லட்சத்திற்கு வெளி மார்க்கெட்டில் வாங்கி கொள்ளலாம். அதற்குரிய வவுச்சர்களை வேளாண் துறையில் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் குழு வவுச்சர்களை சரிபார்த்து, வாங்கிய பொருள்கள், ஆடு,மாடு, கோழிகளை ஆய்வு செய்து அனுமதி வழங்குவர். அதன்பின் ரூ.50 ஆயிரத்தை பயனாளியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன் மாவட்டத்தில் உள்ள எட்டு வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கும் தலா 50 பயனாளிகள் தேர்வு செய்து400 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளாக மூன்று வட்டாரங்கள் என குறைத்து விட்டனர். இந்தாண்டும் 3 வட்டாரங்களுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எட்டு வட்டாரங்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற வேளாண் துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
டிஜிட்டல் கிராப் சர்வேயில் பங்கேற்கவிவசாயிகள், இளைஞர்களுக்கு அழைப்பு
-
முருங்கை விலை சரிவு
-
திருநங்கைகளுக்கு ஹாஸ்டல் சமூக நலத்துறை நடவடிக்கை
-
'அட்மா' திட்டத்தில் நெல் சாகுபடி: ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
-
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி விபரத்தை தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை; அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை
-
கேரளாவில் 2,000 சட்டவிரோத கடன் செயலி; 5,000 போலி இணையதளங்கள் முடக்கம்