வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 5.5 சவரன் தங்க நகை திருட்டு

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பூட்டிய வீட்டின் பின் பக்க கதவை உடைத்து, 5.5 சவரன் தங்க நகை, வெள்ளி, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தை சேர்ந்தவர் தயாளன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வீட்டில் இவரது மனைவி தர்ஷனி வசித்து வந்தார். கடந்த 28 ம் தேதி, சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தர்ஷினி சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு தர்ஷினி அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பிரோவை திறந்து அதிலிருந்த 5.5 சரவன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி, ரு. 30 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சப் இன்ஸபெக்டர் பிரதாப்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவான தடயங்களை பதிவு செய்தனர். சங்கராபுரம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement