நான் தவெகவில் நாளை இணையப்போகிறேன்; அறிவித்தார் சி.விஜயபாஸ்கர்
சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் நாளை (ஜூலை 02) காலை 9 மணிக்கு தவெகவில் இணைகிறேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருந்தவர், புதுக்கோட்டையை சேர்ந்த விஜயபாஸ்கர். சட்டசபை தேர்தலில், விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் தவெகவில் இணைய போவதாக அறிவித்தார்.
அவரது அறிக்கை: கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய 'கோவிட்' பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காக நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள்.
நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமான என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கான மாபெரும் இணைப்பு விழா நாளை (ஜூலை 02) காலை 9.00 மணி முதல், மகாபலிபுரம் Four Points by Sheraton ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ஊடக நண்பர்கள் நேரில் கலந்து கொண்டு, நிகழ்வை பதிவு செய்து, தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கிட அன்புடன் அழைக்கின்றேன். இவ்வாறு சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
பிரத்யேக வீடியோ!
தவெகவுக்கு தாவுகிறார் அதிமுக மாஜி அமைச்சர்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்வும்
மானங்கெட்ட பொழப்பை எவ்வளவு சந்தோஷமாக சொல்கிறார்....
மானமுள்ள ஆனந்தா. திமுகவில் இருக்கும் செந்தில் பாலாஜி, சேகர் பாபு இவிங்க எல்லாம் யாருப்பா
தீய சக்தி, தீர்ந்த சக்தி, துஷ்ட சக்தி. எது ஆபத்தானது. திமுக 40 ஆண்டுகளுக்கு முன்பே தீய சக்தி என்று எம்ஜிஆர் முத்திரை குத்திவிட்டு சென்றுவிட்டார். அதிமுக தீர்ந்த சக்தி என்று நடிகர் விஜய் முத்திரை குத்த முயற்சிக்கிறார். ஆனால் அவர் மீது ஒரு முத்திரை விழுந்துகொண்டு இருக்கிறது. சுரண்டல் லாட்டரி மாஃபியாவின் கூலி விஜயின் தவெக ஒரு துஷ்டசக்தி.
எதற்கு இந்த கதறல்...அதான் இவரு பா ஜ க மட்டுமே கொள்கை எதிரி என்றும் தீய மூ க வின் பி டீம் என்று 2.0 மாடலின் தொடர்ச்சியாக ஆட்சியை நடத்துகிறார். நீங்கள் ஏன் இங்கே வந்து கதறல்...
எடப்பாடி கே பழனிசாமியால் முடியாததை நேற்று வந்த விஜய் செய்து காட்டுகிறார். விஜய் அடைப்பெடுப்பதில் கில்லாடி என்று நிரூபித்துவிட்டார். எடப்பாடியாரால் இந்த ரெண்டு விஜயபாஸ்கரையும், தங்கமணியையும், சிவி சண்முகத்தையும், எம்சி சம்பத்தையும் இனி அடுத்த ரவுண்ட் ஓட இருக்கும் எஸ்பி வேலுமணியையும், நத்தம் விஸ்வநாதனையும் அதிமுகவிலிருந்து அகற்ற முடியுமா. இப்போ பாருங்க விஜய் அழகாக அடைப்பெடுத்து திமுகவை போல சாக்கடையாக மாறாமல் அதிமுகவை தெளிந்த ஓடையாக ஆக்கிக்கொண்டு இருக்கார். அதிமுக தொண்டர்கள் விஜய்க்கு நன்றி சொல்லவேண்டும். விஜய் அவர்களே இந்த கங்காரு குட்டியை தூக்கிகிட்டு தெரியுமே, அது மாதிரி திரியும் ஜெயக்குமார்கூட சைலண்ட்டாக இருக்காரு. சல்லிசா வரும்போதே வாங்கிட வேண்டியதுதானே.
மக்களே உசாரு குட்கா லாட்டரி , ரெண்டும் ஒண்ணா வந்து சுரண்டிடும் .
என்னங்கையா ஸ்கூலில் சின்ன பசங்க டாய்லெட் போகணுமுன்னு விரலை காட்டறமாதிரி காட்டுறீங்க. எங்க போனாலும் மக்கள் பணியமட்டும் வுட்டுடாதீங்க. முன்னிலும் விட முழுவீச்சில் மக்கள் பணியாற்ற வாழ்த்துக்கள்.
தூயசக்தியாக TVK திராவிடசசாக்கடையா மாறி கொண்டு கொண்டு உள்ளது . இது அழிவிற்கே வழி வகுக்கும்
வெட்கம் இல்லாமல் இப்படி பேசறியே. இதுக்கு செத்து மடியலாம்
உங்களிடம் யாரு கேட்டா?
இதுவரை TVK கட்சியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விஜய்க்கு விசுவாசமாக இருக்கிறார்கள். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைகிறார்கள். அதேசமயம், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். திமுக, தவெக வில் இருந்து குறைந்தபட்சம் 20 எம்.எல்.ஏ.க்களையாவது விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. ஏனெனில், அதிமுகவுடன் இணைவதன் மூலம், ஆட்சி அமைக்கத் தேவையான எளிய பெரும்பான்மையை அவர்களால் பெற முடியும். அதிமுகவும் திமுகவும் பணத்தைக் கொள்ளையடிப்பதில் கூட்டுச் சதி செய்ததால், அவர்கள் இதைச் செய்ய முயற்சிப்பார்கள். தங்கள் இடத்தில் வேறு ஒருவர் வருவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. குறிப்பாக, திமுக பல்வேறு திட்டங்களுக்கு டெண்டர் விடுவதற்கு அதிக கமிஷன் வாங்கியது. இப்போது விஜய் அரசு அந்த டெண்டர்களை ரத்து செய்துவிட்டு, புதிய டெண்டர்களை மீண்டும் வெளியிடுகிறது. முன்பு அதிமுகவும் திமுகவும் கமிஷன் வாங்கி டெண்டர்களை நிறைவேற்றி வந்தன, ஆனால் இந்த முறை அவர்களால் அப்படிச் செய்ய முடியாது. இதனால்தான் திமுக பைத்தியக்காரர்களைப் போல அழுதுகொண்டிருக்கிறது.