ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைவு

1


சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,300 ரூபாய்க்கும், சவரன், 1,06,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


நேற்றைய நிலவரம்




நேற்று (ஜூன் 30) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 270 ரூபாய் குறைந்து, 13,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,160 ரூபாய் சரிவடைந்து, 1,04,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 240 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று மாலை தங்கம் கிராமுக்கு, 170 ரூபாய் உயர்ந்து, 13,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்து, 1,05,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.45 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


இன்றைய நிலவரம்



இந்நிலையில் இன்று (ஜூலை 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement