அரசு வேலை மோசடி புகார்; முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விசாரணைக்கு ஆஜர்
சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விசாரணைக்காக ஆஜரானார்.
கடந்த தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் சிவசங்கர். இவரிடம், மின் துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது, குன்னம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.இவரிடம் உதவியாளராக இருந்தவர், அரியலுாரைச் சேர்ந்த இளஞ்செழியன்.
இவர், அரியலுார் செங்குந்தபுரம் உயர் நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி என, அடையாள அட்டையை பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வந்தார். இளஞ்செழியன் மீது, சென்னை எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சீனிவாசன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர். இந்த வழக்கில் இன்று (ஜூலை 01) முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விசாரணைக்காக ஆஜரானார்.
மேலும்
-
அணைகள் நீர் மட்டம்
-
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கும் தனி நபர்கள்; டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., புகார்
-
அமெரிக்காவில் தமிழ் அமைப்பு மாநாடு: ஜூலை 3ல் அண்ணாமலை, ஸ்ரீதர் வேம்பு சிறப்புரை
-
மேகதாது அணைக்கு எதிர்ப்பு; பிலிகுண்டுலுவில் நடைபயணத்தை துவங்கினார் அன்புமணி
-
பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; தர்மபுரி அக்சிதா முதலிடம்
-
இந்தியாவின் 4 நிறுவனங்கள் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா