ராஜஸ்தானில் பஸ் - லாரி மோதி தீவிபத்து; பயணிகள் 8 பேர் உடல் கருகி பலி

2

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் லாரி மீது பஸ் மோதி ஏற்பட்ட தீவிபத்தில் பயணிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நோக்கி பஸ் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. ராஜஸ்தானின் தவுசா அருகே டில்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது பஸ் பயங்கரமாக மோதியுள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.

பஸ்ஸில் தீப்பற்றி இருப்பதை உணர்ந்த பயணிகள் உடனடியாக அலறியபடி வெளியேற முயன்றனர். அவர்களை ஒரு சிலர் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். இந்த தீவிபத்தில் பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். விபத்துக்கான சரியான காரணம் தெரியாத நிலையில், பஸ் ஓட்டுநர் தூங்கியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பஸ்ஸின் அதிவேகமும் இந்த விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இரவு பயணம் தவிர்ப்பது நல்லது

நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வாகன பயணத்தை தவிர்ப்பது அவசியம் . சற்றே கண் அசந்தாலும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் என்பதை மனதில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

Advertisement