நகராட்சி வரிகளை குறைக்க வியாபாரிகள் வலியுறுத்தல்
மேட்டூர்:மேட்டூரில், மளிகை வியாபாரிகள் சங்க, 36ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. பொருளாளர் குணசேகரன் தலைமை வகித்தார்.
மேட்டூர்
ஸ்டேட் வங்கி இணை மேலாளர் மோகன், வங்கி வியாபாரிகளுக்கு வழங்கும்
வசதி, முத்ரா வங்கி கடன், காப்பீடு திட்டம், அதை எவ்வாறு வியாபாரிகள்
பெறுவது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தார்.
சிறு
வணிகர்களுக்கு தமிழக அரசு மருத்துவ சிகிச்சை உதவித்தொகை, 5 லட்சம்
ரூபாய் காப்பீடு வழங்குதல்; பிற நகராட்சிகளை விட மேட்டூரில் சொத்து,
குப்பை வரி இனங்கள் மிக அதிகம் உள்ளதால் குறைத்தல்; மத்திய அரசு, சிறு
வணிகர் பாதுகாப்பு சட்டம் இயற்றி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து
சிறு வணிகர்களுக்கு வணிகம் செய்ய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல்
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைவர் சுந்தரராஜ், செயலர் சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள்
பங்கேற்றனர்.
மேலும்
-
அரசு வேலை மோசடி புகார்; முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விசாரணைக்கு ஆஜர்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைவு
-
நான் தவெகவில் நாளை இணையப்போகிறேன்; அறிவித்தார் சி.விஜயபாஸ்கர்
-
ஈரான் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்படும்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை
-
நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை; பிரதமர் மோடி பெருமிதம்
-
ராஜஸ்தானில் பஸ் - லாரி மோதி தீவிபத்து; பயணிகள் 8 பேர் உடல் கருகி பலி