குடும்ப தகராறில் தீக்குளித்த 'பெண் சீரியஸ்'

எண்ணுார்: எண்ணூர் அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் டில்லி பிரபு, 32, அவரது மனைவி சங்கீதா, 29, இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், மன உ ளைச்சலில் இருந்த சங்கீதா, வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன், கவலைக்கிடமான நிலையில், சங்கீதா சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement