மஞ்சள் வார சந்தையில் ரூ.78 லட்சம் வர்த்தகம்  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த மஞ்சள் வார சந்தையில் ரூ.78 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது.

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதி வியாழன்தோறும் மஞ்சள் சந்தை நடக்கிறது. கள்ளக்குறிச்சி, சிறுவங்கூர், எறையூர், தண்டலை, சின்னசேலம், பாக்கம்பாடி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 89 பேர், தாங்கள் அறுவடை செய்த 784 மூட்டை மஞ்சள் பயிரை விற்பனைக்காக நேற்று கொண்டு வந்தனர்.

அதன்படி விரலி ரக மஞ்சள் 509 மூட்டை வரத்து இருந்தது. இது அதிகபட்சம் ரூ.18,399, குறைந்தபட்சம் ரூ.15,609 விலை போனது. அதேபோல், உருண்டை ரக மஞ்சள் 266 மூட்டை வரத்து இருந்தது. இது அதிகபட்சம் ரூ.15,309, குறைந்தபட்சம் ரூ.13,305, பனங்காளி ரக மஞ்சள் 9 மூட்டை வரத்து இருந்தது. இது அதிகபட்சம் ரூ.32,209, குறைந்தபட்சம் ரூ.25,009 விலை போனது. ஆத்துார், நாமகிரிப்பேட்டை, சேலம் மற்றும் ஈரோடு பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சந்தையில் பங்கேற்று மஞ்சள் பயிருக்கு விலை நிர்ணயம் செய்தனர். நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.78 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக கள்ளக்குறிச்சி சி.எம்.எஸ்., செயலாட்சியர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Advertisement