எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
புதிய வீட்டுக்கான கட்டுமான பணிகளில் என்ன வகை பொருட்களை எப்படி பயன்படுத்த போகிறோம் என்பதில் தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டும். இன்றைய சூழலில் கட்டுமான பணிகளுக்கு சிமென்ட் மிக மிக அத்தியாவசியமான பொருளாக உள்ளது.
இதில் உங்கள் வீட்டு கட்டுமான பணியில் என்ன வகை சிமென்ட்டை பயன்படுத்த வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்த்து, உரிய வழிகாட்டுதல்கள் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். கட்டுமான பணிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் போடும் போது அதில் என்ன வகை சிமென்ட்டை பயன்படுத்த வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.
இதற்கு சிமென்ட் வகைகள், கிரேட்கள், அதன் தன்மை குறித்த சில அடிப்படை தகவல்களை உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக கட்டுமான பணிக்கு, ஓ.பி.சி., பி.பி.சி., பி.எஸ்.சி., என மூன்று வகை சிமென்ட்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
கட்டுமான பணிகளில் ஓ.பி.சி., சிமென்ட் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதில், 33, 43, 53 ஆகிய கிரேட்கள் இருந்தாலும், கட்டடத்தில் துாண்கள், பீம்கள், தளம் அமைப்பது போன்ற பணிகளுக்கு கான்கிரீட் கலவை தயாரிக்க 53 கிரேட் ஓ.பி.சி., சிமென்ட் தான் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக, சுவர் கட்டுவது, பூச்சு வேலை போன்ற இறுதி கட்ட பணிகளுக்கு பி.பி.சி., வகை சிமென்ட் அதிகம் பயன்படுத்தப்படும். இதில் உறுதியாவதற்கு சற்று காலம் எடுக்கும் என்றாலும், பினிஷிங் நிலையில் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் பி.பி.சி., பி.எஸ்.சி., சிமென்ட்களுக்கு கிரேட்கள் கிடையாது, ஐ.எஸ்., குறியீடு அடிப்படையில் மட்டுமே இவை அடையாளப்படுத்தப்படும். பி.எஸ்.சி., சிமென்ட்டுக்கு தண்ணீர் உறிஞ்சும் தன்மை மிக மிக குறைவு என்பதை புரிந்து, அதற்கு ஏற்ற இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக, அஸ்திவாரம் மற்றும் தரை மட்டம்வரையிலான கட்டுமான பணிகள், கீழ்நிலை மற்றும், மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் கட்டுதல் போன்ற பணிகளுக்கு இது ஏற்றது. இதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் சிமென்ட் வாங்குவது நல்லது.
எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்ற ரீதியில் தேடாமல், எந்த வகை சிமென்ட்டை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று பாருங்கள். இதில் நீங்கள் தேர்வு செய்யும் சிமென்ட்டின் நிராற்றும் திறன் என்ன என்று பார்த்து அதை பயன் படுத்தும் போது கவனமாக செயல்படுங்கள்.
குறிப்பாக, கட்டுமான பணியில் நீராற்றுவதற்கு எந்த சிமென்ட்டுக்கு எவ்வளவு நாட்கள் தேவை என்பதை புரிந்து அதற்கு ஏற்றபடி செயல்பட வேண்டும். சிமென்ட் சேர்க்கப்பட்ட கான்கிரீட் கட்டுமானம் உலர்ந்துவிடாமல் நீராற்ற வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்ற ரீதியில் தேடாமல், எந்த வகை சிமென்ட்டை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று பாருங்கள்
மேலும்
-
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; ராணுவத்தினர் 30 பேர் பலி
-
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை; கோவையில் போலீஸ் அதிரடி சோதனை
-
சொத்து பிரச்னை; விவசாயி கொலை
-
மண்ணின் சுமை தாங்கும் திறன் அறிவதற்கான வழிமுறைகள்!
-
ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
-
சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!