கச்சா எண்ணெய் கொடுத்த ரஷ்யாவுக்கு 60,000 டன் பெட்ரோல் அனுப்பியது இந்தியா
மாஸ்கோ: தன் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க, ரஷ்யா முதன்முறையாக இந்தியாவில் இருந்து கடல்வழியாக பெட்ரோல் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நான்கு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் சமீபத்தில் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பலத்த சேதமடைந்து உள்ளன.
இதனால், உலகிற்கே பெட்ரோல் தயாரிப்புக்கான கச்சா எண்ணெயை வழங்கி வந்த ரஷ்யாவில் தற்போது கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அங்கு பெட்ரோல் விலை அதிகரிப்பு, பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசை, ரேஷன் அடிப்படையில் பெட்ரோல் வினியோகம் என, ரஷ்ய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாகவே, ரஷ்யாவில் கோடைகாலத்தில் பெட்ரோல் தேவை மிக அதிகமாக இருக்கும். அங்கு நாளொன்றுக்கு குறைந்தது, 1.10 லட்சம் டன் பெட்ரோல் தேவைப்படும்.
எனவே இந்த திடீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, எரிபொருளை இறக்குமதி செய்வது குறித்து பிற நாடுகளுடன் ரஷ்யா பேச்சு நடத்தி வருவதாக, அதிபரின் கிரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது.
அதன்படி, நம் நாட்டில் இருந்து கடல்வழியாக பெட்ரோல் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. தற்போது நம் நாட்டில் இருந்து 60,000 டன் பெட்ரோல் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தலா 30,000 டன் திறன் கொண்ட இரண்டு பெரிய சரக்குக் கப்பல்கள் ஏற்கனவே நம் நாட்டில் இருந்து புறப்பட்டுவிட்டதாக தெரிகிறது. எனினும், எந்த சுத்திகரிப்பு நிறுவனம் இந்த பெட்ரோலை வழங்குகிறது என்ற விபரங்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவுக்கு நம் நாடு பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் அதே வேளையில், ரஷ்ய கச்சா எண்ணெய் வருகை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஜூன் மாதத்தில் நம் நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய் பங்கு, 50 சதவீதமாக இருந்தது.
வளர்ந்த நாடுகளுக்கு இந்தியா உதவும் நிலைக்கு நமது நாடு முன்னேறி இருக்கிறது என்பதே மகிழ்ச்சியான செய்தி
அதானி நிறுவனத்திற்கு எண்ணை சுத்திகரிப்பு ஆலை இல்லை . ரிலையன்ஸ் குழுமம் அம்பானி உடையது. ஏதாவது தெரிஞ்சுகிட்டு ஏழுதுங்க.
நயாரா என்பது அதானி நிறுவனம். எஸ்ஸார் குழுமம் நிறுவி நடத்தி வந்த சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோல் பம்புகளை அதானி குழுமம் வாங்கிய தகவல் உங்கள் வரை வரவில்லை போலும்.
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது அதானிக்காக. அவர் சுத்திகரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏதேனுமதி செய்தார். ட்ரம்பின் பொருளாதாரத் தடையினால் தடங்கல் ஏற்பட்டது. அதை ரஷ்யவிற்கே மறு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்த அதானியின் சேல்ஸ் மேன் மிகவும் திறமையானவர். வாழ்க அவர் தொண்டு.
நமக்கு ஆபத்தில் உதவிய ரஷ்யாவுக்கு நன்றி கடன்.
"மிகவும் எதார்த்தமான மற்றும் தொலைநோக்குடைய பொருளாதாரப் பதிவு அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை ஒரே நாளில் ஒழிக்க முடியாவிட்டாலும், தேவைப்படும் இடங்களில் மட்டும் அதைப் பயன்படுத்திவிட்டு, மற்ற இருதரப்பு வர்த்தகங்களில் சம்பந்தப்பட்ட நாடுகளின் சொந்த கரன்சிகளையே பயன்படுத்தும் முறையைப் படிப்படியாகக் கொண்டு வர வேண்டும். ஆரம்பத்தில் கரன்சி மாற்று விகிதங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகச் சில சவால்கள் இருந்தாலும், தொடர்ச்சியான வர்த்தகத்தின் மூலம் காலப்போக்கில் இதுவே ஒரு இயல்பான Normal பொருளாதார நடைமுறையாக மாறிவிடும். டாலர் என்ற ஒற்றை நாணயத்தின் மிரட்டல் அரசியலில் இருந்து உலகப் பொருளாதாரம் விடுபட இதுவே மிகச் சரியான மற்றும் அவசியமான பாதையாகும்"
"மிகவும் தீர்க்கமான மற்றும் அவசியமான பொருளாதாரப் பார்வை அமெரிக்கா தனது டாலர் ஆதிக்கத்தை வைத்துக்கொண்டு உலக நாடுகளை மிரட்டும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இந்தியா-ரஷ்யா இடையேயான இந்த பெட்ரோல் வர்த்தகத்தில், அமெரிக்க டாலரை முற்றிலும் தவிர்த்துவிட்டு, இரு நாடுகளின் பரஸ்பர கரன்சிகளையோ ரூபாய்-ரூபிள் அல்லது திர்ஹாம் போன்ற மாற்று சர்வதேச நாணயங்களையோ பயன்படுத்துவதே இரு நாடுகளின் பொருளாதார இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் நல்லது. டாலர் சாம்ராஜ்யத்தை வீழ்த்தி, சொந்த கரன்சிகளில் வர்த்தகம் செய்வதே எதிர்கால உலகளாவிய பொருளாதாரத்திற்குத் துணிச்சலான மற்றும் சரியான பாதையாகும்"
ரஷ்யாவிற்கு இந்தியா பெட்ரோல் கொடுத்து உதவியதால், நன்றியாக ரஷ்யா கச்சா எண்ணெய் விலையை குறைக்கும், அதனை மூலதனமாக பெறும் இந்திய எண்ணெய் நிறுவனங்களின் மூலப்பொருள் விலை குறையும், அதனால் இந்திய சந்தையில் பெட்ரோல் விலை குறையும். இது இந்திய நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி.
முன் எச்சரிக்கை நடவடிக்கதையாக ரக்ஷ்யா அவர்களின் முக்கிய சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி திறனில் 60 சதவிகித அளவிற்கு மட்டுமே இயக்க முடிவு செய்து உள்ளது ....அதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் முடிவை எடுத்து உள்ளது ...இந்த முடிவு ரஷ்யா மிகப்பெரிய அளவில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது ..மேற்கத்திய ஊடகங்கள் தகவல் போர் செய்து கொண்டு இருக்க களத்திலோ ரஷ்யா உக்ரைன் மற்றும் நேட்டோ படையினரை அடித்து துவைத்து துவம்சம் செய்து கொண்டு இருக்கின்றனர் ...ரஷ்ய தாக்குதல் எதிர் கொள்ள முடியாமல் நேட்டோ படையினரை சில இடங்களில் ஓடிவிட்டதாகவும் தகவல் வந்துகொண்டு இருக்கிறது
நான்கு ஆண்டுகளாக சின்னஞ்சிறு உக்ரேன் நாட்டை ரஷ்யா எனும் வல்லரசால் வெல்லவே முடியவில்லை. ரஷ்யாவின் சுத்திகரிக்கும் ஆலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளது உண்மை. டிரம்ப்பை விட ஆபத்தானவன் சர்வாதிகாரி புடின். அவரை விட ஆபத்தானது சீனா. மூன்றும் விஷக்கிருமிகள்.
மாவீரன் மோடி தலைமையிலான இந்தியா எப்போதும் செய்நன்றி மறவாதது... அதே நேரம் த்ரோகிகளையும் எதிரிகளையும் அவர்களின் கூடாரத்துகுள்ளேயே புகுந்து கொன்றுவிடும்....இது பதினைந்து ஆண்டு கால வரலாறு...
"உண்மையான நட்பிற்கு இலக்கணம் இதுதான் ரஷ்யா நமக்குக் கச்சா எண்ணெய் கொடுத்தது இன்று அங்கு தட்டுப்பாடு ஏற்பட்ட சில நாட்களிலேயே, 30 ஆயிரம் டன் கொண்ட இரு கப்பல்கள் மூலம் 60 ஆயிரம் டன் பெட்ரோலை இந்தியா உடனடியாக அனுப்பி வைத்துள்ளது. சர்வதேசப் போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், இரு நாடுகளும் தங்களின் பரஸ்பரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வது உலக நாடுகளுக்கு ஒரு வலுவான செய்தியாகும். இக்கட்டான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு பெட்ரோல் விநியோகம் செய்த இந்திய அரசின் இந்த வர்த்தக ராஜதந்திர நடவடிக்கை பாராட்டுக்குரியது"மேலும்
-
ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
-
சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!
-
பாட்டி கொடுத்த சொத்தில் பேத்தியின் கணவர் உரிமை கோர முடியாது!
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
-
நெடுஞ்சாலையை ஒட்டிய மனையை வாங்குவதால் என்ன பிரச்னை?
-
வீடு கட்டுவோர் கட்டடத்தின் பாகங்கள் குறித்து அறிய வேண்டியவை!