அதிமுகவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்; வைகைச் செல்வன் ராஜினாமா
சென்னை: அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பு முதன்மை செயலாளராக இருந்த வைகைச் செல்வன் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்புக்கு பிறகு முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி, மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்து விட்டனர்.
இந்த சூழலில், அதிமுகவின் மற்றுமொரு முன்னாள் அமைச்சரும், செய்தித் தொடர்பு முதன்மை செயலாளருமான வைகைச் செல்வனும் கட்சியில் இருந்து விலகுவதாக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில்; திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து, அதிமுக சமசர போக்கில் போனதால் தனது அடையாளத்தை இழந்து விட்டது. சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதன் காரணமாகவும், தனது வெற்றிப்பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது.
தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்தேன். ஆனால், மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே, இந்த கட்சியில் இருந்து விலகுகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சியின் தலைமை மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து (5)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03 ஜூலை,2026 - 19:59 Report Abuse
நல்ல சிறந்த பேச்சாளர் கட்சிக்கு அரும்பாடு பட்டவர்களில் இவரும் ஒருவர் ஜெயலலிதா அம்மையார் இவரின் சேவையை பெரிதும் பயான்படுத்திக்கொண்டார் பாராட்டினார் ஆனால் இப்போது தன்னை முற்றிலும் புறக்கணிப்பிலிருந்துது விடுபட இவரால் மனது இடம் கொடுக்கவில்லை ஆதலால் இவர் எடுத்த நல்ல முடிவு 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03 ஜூலை,2026 - 19:59 Report Abuse
நல்ல சிறந்த பேச்சாளர் கட்சிக்கு அரும்பாடு பட்டவர்களில் இவரும் ஒருவர் ஜெயலலிதா அம்மையார் இவரின் சேவையை பெரிதும் பயான்படுத்திக்கொண்டார் பாராட்டினார் ஆனால் இப்போது தன்னை முற்றிலும் புறக்கணிப்பிலிருந்துது விடுபட இவரால் மனது இடம் கொடுக்கவில்லை ஆதலால் இவர் எடுத்த நல்ல முடிவு 0
0
Reply
Mariadoss E - Trichy,இந்தியா
03 ஜூலை,2026 - 19:13 Report Abuse
வடிவேல் காமெடி ஞாபகம் வருது. இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொல்லையுமா போட்டுகிட்டு அலையனும். 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
03 ஜூலை,2026 - 19:03 Report Abuse
பேசாமல் இ பி எஸ் கட்சியின் பெயரை அ த வெ க என்று மாற்றிவிடலாம். 0
0
Reply
Govi - ,
03 ஜூலை,2026 - 14:11 Report Abuse
எல்லாம் காசுதான் 0
0
Reply
மேலும்
-
ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
-
சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!
-
பாட்டி கொடுத்த சொத்தில் பேத்தியின் கணவர் உரிமை கோர முடியாது!
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
-
நெடுஞ்சாலையை ஒட்டிய மனையை வாங்குவதால் என்ன பிரச்னை?
-
வீடு கட்டுவோர் கட்டடத்தின் பாகங்கள் குறித்து அறிய வேண்டியவை!
Advertisement
Advertisement