மழைநீர் கால்வாயை துார்வர செங்கை மக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு, ஜூலை 4–
செங்கல்பட்டு நகராட்சியில் பருவமழைக்கு முன் வடிகால்வாய்களை, துார்வாரி சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி,கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுந்தபுத்தேரி, அளகேசன்நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.
இப்பகுதியில், சாலையின் இருபுறமும் கடந்தாண்டு மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது. ஆனால், கால்வாய்கள் முறையாக நகராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், பருவ மழை காலங்களில், மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் வழிந்தோடுகிறது.
இவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன், மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
300 நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி; தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிஷாவில் கைது
-
தாழியை எட்டி உதைத்த பா.ஜ.,!
-
'டவுட்' தனபாலு
-
வீடு தேடி வரும் ரேஷன் திட்டம் விரிவாக்கம் கணக்கெடுப்பு துவக்கம்
-
முதல்வரின் ஆய்வு கூட்டங்களுக்காக தயாராகும் 'ஸ்லைடு' காட்சிகள், வீடியோ தொகுப்புகள்
-
திருச்செங்கோடு கோவில் விவகாரத்தில் கமிஷனரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு