முதல்வரின் ஆய்வு கூட்டங்களுக்காக தயாராகும் 'ஸ்லைடு' காட்சிகள், வீடியோ தொகுப்புகள்
சென்னை: முதல்வர் விஜய் நடத்தும் ஆய்வு கூட்டங்களில், 'ஸ்லைடு' காட்சிகள், வீடியோ தொகுப்புகளை தயாரிக்கும், 'டிஜிட்டல் கிரியேட்டர்'களுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுபட்ஜெட் மற்றும் வேளாண் பட் ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதை தொடர்ந்து, சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன. த.வெ.க., அரசில், முதல்வர் விஜய் உட்பட பல அமைச்சர்கள் புதியவர்கள். இவர்கள், அரசு நிர்வாகம் மற்றும் துறை நிர்வாகம், திட்டங் கள் செயலாக்கம் தொடர்பாக, பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியில், இது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு, முதல்வர், அமைச்சர்களிடம் அதிகாரிகள் வழங்குவர். சில நேரங்களில், 'ஆன்லைன்' வாயிலாகவும் தகவல்கள் விளக்கப்படும். தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள், 'மொபைல் போன், டேப்', கணினி வாயிலாக, துறைகள் தொடர்பான விபரங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.
வரும், 22ம் தேதி வரை, துறை வாரியான ஆய்வு கூட்டங்களை, முதல்வர் நடத்த உள்ளார். காலை, மாலை என இரண்டு வேளைகளில், இந்த ஆய்வு கூட்டங்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு விளக்கும் வகையில், துறை தொடர்பான தகவல்களை, 'ஸ்லைடு' காட்சிகள் மற்றும் வீடியோ தொகுப்புகளாக தயாரித்து வழங்க வேண்டும் என, தலைமை செயலர் வாயிலாக, அனைத்து துறை செயலர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு துறையில் இருந்தும் குறைந்தபட்சம், 20 'ஸ்லைடு' காட்சிகள் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தலைமை செயலரின் உத்தரவை அடுத்து, அதற்கான பணிகளில், துறை செயலர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், தலைமை செயலகத்தில், தகவல்களை மின்னணு வடிவத்தில் தயாரித்து வழங்கும், 'டிஜிட்டல் கிரியேட்டர்'களுக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது.
இந்த ஸ்லைடு காட்சிகள், ஜனநாயகன் போல் லீக் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது