திருச்செங்கோடு கோவில் விவகாரத்தில் கமிஷனரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: ஆயிரம் ஆண்டுகள் பழமையான, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள, ஆதிசைவ சிவாச்சாரியார்களுக்கு நீதி வழங்கக் கோரிய விவகாரத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் வினய் உத்தரவில், அதிகாரிகள் நேற்று ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்.

சம்பளம் கிடையாது திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், 124 சிவாச்சாரியார்கள் பூஜை செய்து வருகின்றனர். இவர்களில் நான்கு பேர் மட்டுமே, அரசு சம்பளம் பெற்று வருகின்றனர். மீதம் உள்ளோருக்கு, அறநிலையத் துறை சம்பளம் கிடையாது.

கடந்த 2020ம் ஆண்டு, கோவிலில் பணியாற்றும் 80 சிவாச்சாரியார்களுக்கு, அரசு தரப்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

கடந்த 15 நாட்களுக்கு முன், நீதிமன்ற அனுமதியுடன், அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் என்பவர், கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் போலியானவை என, குற்றம் சாட்டினார். அவர் அளித்த புகாரில், நான்கு அர்ச்சகர்கள் மீது, போலீசார் வழக்கு பதிந் தனர்.

ஆனால், அடையாள அட்டைகளை, 2020ல் கோவிலில் பணியாற்றிய உதவி ஆணையர் சரவணன் என்பவரே வழங்கியு ள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், ஏதும் அறியாத சிவாச்சாரியார்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்வது, எந்த விதத்தில் நியாயம் என, பக்தர்கள் மத்தியில் குற்றச் சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் வினய், ஒரு வார ஆய்வுக்கு உத்தர விட்டார்.

அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கோவில் உதவி ஆணையர் சின்னத்துரை தலைமையிலான குழு ஆய்வு செய்து, ஆய்வறிக்கையை கமிஷனரிடம் நேற்று சமர்ப்பித்தது.

முறைகேடு இந்த அறிக்கை அடிப் படையில், முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் மீது, துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

இது தொ டர்பாக பக்தர்கள் கூறுகையில், 'தகுதி வாய்ந்த சிவாச்சாரியார்களுக்கு, உடனடியாக நிரந்தர அடையாள அட்டை வழங்கப்படுவதுடன், அர்ச்சகர்களின் வாழ்வாதாரமும், கோவிலின் புனிதமும் பாதுகாக்கப்பட வேண்டும்' என்றனர்.

Advertisement