அரசு விடுதிக்கு செல்ல மாணவர்கள் 2 கி.மீ., நடந்து செல்லும் அவலம்
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் படிக்கும் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அரசு விடுதிக்கு செல்ல 2 கி.மீ., நடந்து சென்று மதியம் சாப்பிடும் அவல நிலை உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு மீண்டும் பள்ளிக்கு செல்வதற்காக மாணவர்கள் லிப்ட் கேட்டு செல்கின்றனர்.
முதுகுளத்துார்– -பரமக்குடி ரோடு ஆற்றுப்பாலம் அருகே மாணவர் விடுதியும், முதுகுளத்துார்- –கமுதி ரோடு அரசு பஸ் பணிமனை அருகே மாணவர் விடுதி உள்ளது. இங்கு முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு விடுதியில் தங்கி படிக்கின்றனர்.
மதியம் நேரத்தில் உணவு இடைவேளையின் போது சாப்பிடுவதற்காக 2 கி.மீ., நடந்து சென்று சாப்பிடும் அவல நிலை உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு திரும்பி வர முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். வேறு வழியின்றி இவ்வழியே செல்லும் டூவீலர், சரக்கு வாகனங்களை மறித்து லிப்ட் கேட்டு செல்கின்றனர். சில நேரங்களில் சரக்கு வாகனங்களில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
இதனால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி இவ்வழியே மதிய நேரத்தில் செல்லும் அரசு பஸ்க்களில் மாணவர்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
–––
மேலும்
-
ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
-
சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!
-
பாட்டி கொடுத்த சொத்தில் பேத்தியின் கணவர் உரிமை கோர முடியாது!
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
-
நெடுஞ்சாலையை ஒட்டிய மனையை வாங்குவதால் என்ன பிரச்னை?
-
வீடு கட்டுவோர் கட்டடத்தின் பாகங்கள் குறித்து அறிய வேண்டியவை!