இலவச மனைப்பட்டா வழங்க கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

தமிழ் சங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநிலத்தில் வாழும் காட்டுநாயக்கன், மலக்குறவன், குருமன்ஸ், எருகுலா இனங்களை மத்திய அரசு அட்டவணை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும்.

இது தொடர்பாக கூட்டமைப்பின் சார்பில், டில்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்ய வேண்டும். கூட்டத்தில் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். பழங்குடிகள் வசிக்கும் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இருளர் பழங்குடியினர் கோவில் கட்ட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் புருேஷாமத்தமன் நன்றி கூறினார்.

Advertisement