பாலஸ்ரீ தேசிய கலை விருது மாணவர்களுக்கு அழைப்பு
ஊட்டி: பாலஸ்ரீ தேசிய விருது கலை பயிற்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கலை பண்பாட்டு துறை சார்பில், 38 மாவட்டங்களில், 60 இடங்களில் செயல்பட்டு வரும் ஜவகர் சிறுவர் மன்றங்களில், 5 முதல், 16 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்கள், அந்தந்த வட்டார பகுதிகளில் பயன்பாட்டில் இருந்து வரும் செவ்வியல் மற்றும் நாட்டுப்புற கலைகளில் ஏதேனும், நான்கு கலைகளில் நடத்தப்படும் கலை பயிற்சி வகுப்புகளில், இலவசமாக பங்கேற்கலாம்.
ஆண்டுக்கு பதிவு கட்டணமாக, 200 ரூபாய் (ஜூன் -முதல் ஏப்.,) செலுத்த வேண்டும். பயிற்சி பொருட்கள், கலை பண்பாட்டு துறையால் வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவர்கள், கலை பண்பாட்டு துறையால் நடத்தப்படும் மாவட்ட அளவிலான, கலை போட்டிகள் பயிற்சி முகாம்களில் பங்கேற்கலாம்.
மாவட்ட அளவில் முதலிடத்தில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாநில அளவிலும், புதுடில்லியில் நடக்கும், தேசிய அளவிலான கலைப் போட்டியில் பங்கு பெற வாய்ப்பு கிடைக்கும். இறுதியாக வெற்றி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் ‘பால ஸ்ரீ ’ தேசிய விருது வழங்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரையிலும், ஞாயிற்று கிழமை காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை கராத்தே, பரதம், ஓவியம் மற்றும் சிலம்பம் ஆகிய கலை பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்று பயன் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
-
சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!
-
பாட்டி கொடுத்த சொத்தில் பேத்தியின் கணவர் உரிமை கோர முடியாது!
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
-
நெடுஞ்சாலையை ஒட்டிய மனையை வாங்குவதால் என்ன பிரச்னை?
-
வீடு கட்டுவோர் கட்டடத்தின் பாகங்கள் குறித்து அறிய வேண்டியவை!