பஸ் கண்டக்டரை தாக்கி பணப்பையை பறித்தவர் கைது

தேவதானப்பட்டி, ஜூலை‌ 4-

அரசு பஸ்சில் பயணிகளை அவதூறக பேசிய மேல்மங்கலத்தை சேர்ந்த தங்கப்பாண்டி 26.யை கண்டித்த கண்டக்டர் அழகர்சாமி 41.யை தாக்கி அவரது பணப்பையை பறித்து தப்ப முயன்றவரை போலீசார் கைதுசெய்தனர்.

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி சீலி கருப்பணன் தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி 41. அரசு பஸ் கண்டக்டர். பெரியகுளத்திலிருந்து ஆண்டிபட்டிக்கு செல்லும் டவுன் பஸ்சில் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். டிரைவர் முத்து வடிவேல் பஸ்சை இயக்கினார். மேல்மங்கலம் மேலத்தெருவை சேர்ந்த தங்கபாண்டி 26. பஸ்சில் மதுபோதையில் பயணித்தார். பஸ்சில் அவதூறாக பேசிக் கொண்டு வந்தார். இதனை கண்டக்டர் அழகர்சாமி கண்டித்தார். இதனால் மேல்மங்கலம் கல்லுக்கட்டு பஸ் ஸ்டாப் பகுதியில் அழகர்சாமியை கன்னத்தில் அடித்து பஸ்சிற்குள் தங்கப்பாண்டி தள்ளிவிட்டார். மேல்மங்கலம் அருகே கல்லுக்கட்டு பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது, அழகர்சாமியின் டிக்கெட் பணப்பையை பறித்துக்கொண்டு ஓடினார். அழகர்சாமி மற்றும் பொதுமக்கள் தங்கபாண்டியை விரட்டி பிடித்தனர். ஜெயமங்கலம் போலீசார் தங்கப்பாண்டியை கைது செய்தனர்.

--

Advertisement