குழாய் சீரமைப்பு பணி அரைகுறை காஞ்சியில் வீணாகும் குடிநீர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தும்பவனம் அருணாசலம் தெருவில், குடிநீர் குழாய் உடைப்பை முறையாக சீரமைக்காததால், மீண்டும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள தும்பவனம் அருணாசலம் தெருவில், கடந்த இரு வாரங்களுக்கு முன், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளம் தோண்டப்பட்டடு குழாய் உடைப்பு சீரமைக்கப்பபட்டது. சீரமைப்பு பணி முடிந்தபின், பள்ளத்தை முறையாக மூடவில்லை.

குடிநீர் குழாய் உடைப்பு பணியை அரைகுறையாக சீரமைத்ததால், அதே இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, தும்பவனம் அருணாசலம் தெருவில், குடிநீர் குழாய் உடைப்பை முறையாக சீரமைக்கவும், சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement