சுரங்கப்பாதையில் வாகனம் சிக்கியதால் பரங்கிமலையில் போக்குவரத்து நெரிசல்
ஆலந்துார்: பரங்கிமலை ரயில் நிலையம் செல்லும் சாலையில் மெட்ரோ ரயில் திட்டப்பணி நடப்பதால், ஆலந்துார் –- ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளை இணைக்கும் பரங்கிமலை சுரங்கப்பாதையில், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
நேற்று காலை, வழக்கத்திற்கு மாறாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுரங்கப்பாதையில் செல்ல முயன்று ஒரு வாகனம் சிக்கியதால், இந்த நெரிசல் மேலும் பல மணி நேரம் நீடித்தது.
இதனால், பள்ளி, கல்லுாரி, பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி தவித்தது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தாமதமாக வந்து போக்குவரத்தை சீரமைத்ததால், பரங்கிமலை போக்குவரத்து போலீசாருக்கும், வாகன ஓட்டிகளும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பரங்கிமலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடியும் வரை, கருணீக்கர் தெரு சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
300 நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி; தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிஷாவில் கைது
-
தாழியை எட்டி உதைத்த பா.ஜ.,!
-
'டவுட்' தனபாலு
-
வீடு தேடி வரும் ரேஷன் திட்டம் விரிவாக்கம் கணக்கெடுப்பு துவக்கம்
-
முதல்வரின் ஆய்வு கூட்டங்களுக்காக தயாராகும் 'ஸ்லைடு' காட்சிகள், வீடியோ தொகுப்புகள்
-
திருச்செங்கோடு கோவில் விவகாரத்தில் கமிஷனரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு