பந்தலுாரில் தெருநாய்களால் பாதிக்கப்படும் மக்கள்
பந்தலுார்: பந்தலுார் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில், நெல்லியாளம் நகராட்சி, சேரங்கோடு மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சிகள் அமைந்துள்ளன.
இந்த பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. திறந்த வெளிகளில் மீன் மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்படும் நிலையில், அவற்றை உட்கொள்ளும் தெருநாய்கள் ரேபீஸ் நோய் பாதிக்கப்பட்டு, வெறிநாய்களாக மாறி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், கையுன்னி அருகே போத்துக்கொல்லி பகுதியில், ராஜேஷ் என்பவரின் மகள் பள்ளி விட்டு வரும்போது அவரை கடிக்க முற்பட்ட தெருநாய்கள் புத்தக பையை கடித்து குதறியுள்ளன. அருகில், இருந்தவர்கள் மாணவியை காப்பாற்றியுள்ளனர். எனவே, தெருநாய்களால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
-
சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!
-
பாட்டி கொடுத்த சொத்தில் பேத்தியின் கணவர் உரிமை கோர முடியாது!
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
-
நெடுஞ்சாலையை ஒட்டிய மனையை வாங்குவதால் என்ன பிரச்னை?
-
வீடு கட்டுவோர் கட்டடத்தின் பாகங்கள் குறித்து அறிய வேண்டியவை!
Advertisement
Advertisement