மூவருக்கு குண்டாஸ்
தேனி, ஜூலை 4–தேனி மாவட்டத்திற்குள் கஞ்சா கடத்திய மதுரை மாவட்டம் செல்லுார் மார்க்கெட் ரோடு சரவணன் 48, என்பவரை தேவாரம் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே போல் கேரளாவிற்கு 7.5 டன் ரேஷன் அரிசி கடத்திய க.புதுப்பட்டி சுந்தர் 39, கே.கே.,பட்டி பாண்டீஸ்வரன் 35 ஆகியோரை உணவு கடத்தல் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் வைத்திநாதன் உத்தரவில் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
-
சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!
-
பாட்டி கொடுத்த சொத்தில் பேத்தியின் கணவர் உரிமை கோர முடியாது!
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
-
நெடுஞ்சாலையை ஒட்டிய மனையை வாங்குவதால் என்ன பிரச்னை?
-
வீடு கட்டுவோர் கட்டடத்தின் பாகங்கள் குறித்து அறிய வேண்டியவை!
Advertisement
Advertisement