இன்று மழைக்கு வாய்ப்பு

நாமக்கல்:நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வார வானிலையை பொறுத்தவரை, லேசான மழை பதிவானது. அடுத்த, ஐந்து நாட்களுக்கு, நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில், இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல்நேர வெப்பம், 96.8 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மிகாமலும், இரவுநேர வெப்பம், 77 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மிகாமலும் காணப்படும். காற்று பெரும்பாலும் மேற்கு மற்றும் தென் மேற்கு திசையிலிருந்து மணிக்கு, -10 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement