ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு

மதுரை: மதுரையில் ஹிந்து முன்னணி செயலாளர் நுால் பட்டறைக்கு தீ வைக்கப்பட்டதில் ரூ. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்தன.

ஹிந்து முன்னணி கோட்டச் செயலாளர் அரசு பாண்டி.இவருக்கு சொந்தமான நுால் பட்டறை மதுரை வில்லாபுரம் கிழக்கு தெருவில் உள்ளது.இதில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்புகள் அதிகம் உள்ள இப்பகுதியில் பற்றிய தீயால் மக்கள் அச்சமடைந்தனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீயணைப்பு வண்டியில் தண்ணீர் பற்றாமல் போனதால் பொதுமக்கள் குடியிருப்புகளில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க உதவினர். ரூ. பல லட்சம் மதிப்புள்ள டூவீலர்கள், நுால் கயிறுகள், இயந்திரங்கள் எரிந்தன.

இளைஞர்கள் சிலர் தீ வைத்து சென்றதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். தன்னை மிரட்டுவதற்காக நுால் பட்டறையில் தீ வைத்துள்ளதாக அரசு பாண்டி தெரிவித்தார்.

இதனிடையே தீ வைத்தவர்களை கைது செய்யக்கோரி ஹிந்து முன்னணியினர், பா.ஜ.,வினர் வில்லாபுரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்தனர்.

Advertisement