முதலீட்டாளர்கள் பாதுகாப்புக்காக 'ஆட்டோ- - பிளெட்ஜ், ஆட்டோ -- ரிலீஸ்' செபியின் புதிய விதிமுறைகள் அறிமுகம்
செபி கொண்டுவந்துள்ள ஆட்டோ- - பிளெட்ஜ் மற்றும் ஆட்டோ - -ரிலீஸ் புதிய நடைமுறை, முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும் பங்கு தரகர்களுக்கு செயல்பாட்டு எளிமையையும் வழங்கும்.
இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களின் பங்குகள் தவறாக பயன்படுத்தப்படுவதை முற்றிலும் தடுப்பதுடன், ஒட்டுமொத்த பங்கு வர்த்தக நடைமுறையையும் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆட்டோ- - -பிளெட்ஜ்
வாடிக்கையாளர் வாங்கிய பங்கிற்கு பணம் செலுத்தவில்லை எனில், முன்பு அவை தரகர்களின் பொது கணக்கில் வைக்கப்படும். ஆனால் இனி, அந்த பங்குகள் நேரடியாக வாடிக்கையாளரின், டிமேட் கணக்கிற்கே மாற்றப்படும்; எனினும், பணம் செலுத்தாத பட்சத்தில், வாடிக்கையாளரின் அனுமதியின்றி அந்த பங்குகள், பணம் செலுத்தப்படவில்லை என்ற காரணத்துடன் தரகரின் கணக்கில் தானாகவே அடகு வைக்கப்படும்.
ஆட்டோ- - -ரிலீஸ்
பணம் செலுத்தப்படாத பங்குகளுக்கான நிலுவை தொகையை முதலீட்டாளர்கள் 5 வர்த்தக நாட்களுக்குள் செலுத்த வேண்டும்; அப்படி செலுத்தினால் தரகர் அந்த பிணையை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஒருவேளை வாடிக்கையாளர் பணமும் செலுத்தாமல், தரகரும் எவ்வித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல் 5 நாட்கள் கடந்துவிட்டால், 6வது வர்த்தக நாளின் முடிவில் டிபாசிட்டரிகள் அந்த பிணையை தானாகவே விடுவித்துவிடும்; அதன்பின் வாடிக்கையாளர் கணக்கில் அந்த பங்குகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி முழுமையாக கிடைக்கும்.
நிதி திரட்ட தடை முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்காக, இவ்வாறு பணம் செலுத்தப்படாமல் பிணையமாக வைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளரின் பங்குகளை பயன்படுத்தி, தரகர்கள் வங்கிகளிலோ அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களிலோ அடகு வைத்து சொந்த தேவைக்காக நிதி திரட்ட செபி கடுமையான தடை விதித்துள்ளது.
தரகரின் உரிமை ஐந்து நாட்களுக்குள் வாடிக்கையாளர் பணத்தை செலுத்த தவறினால், தரகர் முறையான முன்னறிவிப்பு வழங்கி, அந்த பங்குகளை சந்தையில் விற்று தங்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகையை மீட்டெடுக்க முழு உரிமை உண்டு. அவ்வாறு பங்குகளை விற்ற பிறகு ஏதேனும் கூடுதல் பணம் மீதம் இருந்தால், அது உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.
மேலும்
-
சுவாமி அபிஷேகத்துக்கு தீர்த்தம் மணிமுக்தாற்றில் உறைகிணறு
-
தாங்க முடியல... மது, கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம்
-
மண்ணில்லா விவசாயம்: விவசாயிகளுக்கு பயிற்சி
-
விடுதிகளில் நடக்கும் குறைபாடுகள்: தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண்
-
மானாமதுரையில் வீடுகளில் தொடர் திருட்டு: குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
-
தேனி மாவட்டம் நிகழ்ச்சி