மண்ணில்லா விவசாயம்: விவசாயிகளுக்கு பயிற்சி
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மண்ணில்லா விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் துவக்கி வைத்து, மண்ணில்லா விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மண்ணில்லா விவசாயி சாமுண்டீஸ்வரி மண் கலவை (தென்னை நார்க்கழிவு மற்றும் மண்புழு உரம்), நுண்கீரை விதை தேர்வு, விதை தயாரிப்பு, விதை தரம், 120 வகையான நுண்கீரை விதைகள் மற்றும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள், வளர்ப்பு முறை, முளைப்புத்திறன், நீர் தெளிப்பு, அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் குறித்து விளக்கமளித்தார்.
பேரசிரியர்கள் கண்ணன், சத்தியநாரயணன், ஜெய்வேலு, கமலகண்ணன் ஆகியோர் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். விவசாயி தமிழரசி மண்ணில்லா விவசாயத்தில் மதிப்புக்கூட்டுதல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மாவட்டத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.
மேலும்
-
விழிப்புணர்வு கருத்தரங்கு
-
விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி
-
மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொழிலாளி கொலையில் முடிந்தது: விழுப்புரம் அருகே 2 பேர் கைது
-
கீழச்சாலுாரில் வறுமையில் வாடிய குடும்பத்தினர் மீட்பு
-
பரிதிமாற் கலைஞர் பிறந்த தின விழா
-
வட நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணி: முதல்வர் விஜய் ஆய்வு