தாங்க முடியல... மது, கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம்
கள்ளக்குறிச்சி நகரில் குடியிருப்புக்கு செல்லும் வழியில் சாலை, தெருக்களில் மது மற்றும் கஞ்சா ஆசாமிகளால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பலர் நாளுக்கு நாள் கஞ்சா, மதுபோதைக்கு அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். இவர்கள் பொது இடங்களில் மது அருந்தும் போதும், கஞ்சா போதையிலும் பல்வேறு இடங்களில் அவ்வப்போது தகராறில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் மது குடிக்கும் போது ஏற்படும் தகராறு கிராம மக்களிடையே மோதல் உருவாக்கும் சூழ்நிலையை காணமுடிகிறது.
அதேபோல் சில நாட்களாக அவ்வப்போது போதையில் இளைஞர்கள் சிலர் இரவில் வாகனங்களில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி நகர பகுதியில் கரியப்பா நகர், கேபிஆர் நகர், தென்கீரனுார் சாலை, அண்ணா நகர், ஜெ.ஜெ., நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது குடியிருப்புகளுக்கு இடையே ஆங்காங்கே சாலையில் அமர்ந்து மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்தருணத்தில் அவ்வழியாக செல்லும் குடியிருப்பு வாசிகள் அச்சமடைகின்றனர்.
குடியிருப்புகளுக்கு இடையே சாலையில் அமர்ந்து மது குடிப்போரை தட்டிக் கேட்கும் பொதுமக்களிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர். மேலும், காலி மதுபாட்டில்களையும் சாலையிலேயே உடைத்து விட்டு செல்கின்றனர்.
இரவில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ளும் தருணத்தில் அங்கிருந்து ‘எஸ்காப்’ ஆகிவிடும் நிலையில் பின்னர் மீண்டும் அதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
எனவே, கள்ளக்குறிச்சி நகரில் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொண்டு, மது மற்றும் கஞ்சா அருந்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும்
-
ரூ.3 கோடி மதிப்பு கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
-
சேதமடைந்த சாலையால் முகுந்தகிரி மக்கள் அவதி
-
விளையாட்டு// மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை அணியினர் சாம்பியன்
-
தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
-
செய்திகள் சில வரிகளில்...
-
பெருங்களத்துாரில் மதுக்கடையை மூட இரவில் பகுதிமக்கள் சாலை மறியல் கத்தியுடன் ‘குடி’மகன்கள் திரிவதால் அச்சம்