விடுதிகளில் நடக்கும் குறைபாடுகள்: தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண்
விழுப்புரம்: மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் விடுதிகள் செயல்படுகிறது. விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளும் தங்கள் விடுதிகளில் நடைபெறும் தவறுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க அரசால் 9445477016 என்ற வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, மாணவ, மாணவிகள் விடுதிகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக எவ்வித தயக்கமுமின்றி வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விழிப்புணர்வு கருத்தரங்கு
-
விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி
-
மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொழிலாளி கொலையில் முடிந்தது: விழுப்புரம் அருகே 2 பேர் கைது
-
கீழச்சாலுாரில் வறுமையில் வாடிய குடும்பத்தினர் மீட்பு
-
பரிதிமாற் கலைஞர் பிறந்த தின விழா
-
வட நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணி: முதல்வர் விஜய் ஆய்வு
Advertisement
Advertisement