உறுவையாறு கிராமத்தில் மண்வளம் குறித்த பயிற்சி
வில்லியனுார்: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, பண்ணை தகவல் ஆலோசனை மையம், வில்லியனுார் மற்றும் தொண்டமாநத்தம் உழவர் உதவியகம் சார்பில், மண்வள மேலாண்மை மற்றும் சமச்சீரான உரப் பயன்பாடு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
உருவையாறு, சாய்பாபா கோவில் வளாகத்தில் நடந்த பயிற்சி முகாம் துவக்க விழாவில், வில்லியனுார் வேளாண் அலுவலர் தினேஷ்குமார் வரவேற்றார். தொண்டமாநத்தம் வேளாண் அலுவலர் சங்கரதாஸ் நோக்க உரையாற்றினார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் நிபுணர் பிரபு மண்வள மேலாண்மை குறித்தும், விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி கிராமத்தின் முன்னோடி இயற்கை விவசாயி ராதாகிருஷ்ணன் இயற்கை விவசாயத்திற்கும் மண் வளத்திற்கும் உள்ள முக்கியத்துவம் குறித்தும், மண் ஆய்வுக் கூடத்தின் வேளாண் அலுவலர் சுபாஆனந்தி சமச்சீரான உரம் பயன்பாடு குறித்தும் பேசினர்.
இரண்டாம் நாள் முகாமில் காரைக்கால் பஜன்கோ மண்ணியல் துறை உதவி பேராசிரியர் சக்திவேல் மண் வள மேலாண்மை மற்றும் சமச்சீரான உர பயன்பாடு, மண் பரிசோதனை குறித்தும், திருக்கனுாரில் இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயி கலாநிதி இயற்கை விவசாயம் மூலம் மண்வளத்தை எவ்வாறு பேணி காப்பது குறித்தும் விளக்கினர்.
திருக்காஞ்சி வேளாண் அலுவலர் தினகரன் நன்றி கூறினார். வில்லியனுார், ஒதியம்பட்டு, திருக்காஞ்சி, அரியூர் மற்றும் தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன், ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் மற்றும் உழவர் உதவிய களப்பணியாளர்கள் செய்திருந்தனர்.
மேலும்
-
சுவாமி அபிஷேகத்துக்கு தீர்த்தம் மணிமுக்தாற்றில் உறைகிணறு
-
தாங்க முடியல... மது, கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம்
-
மண்ணில்லா விவசாயம்: விவசாயிகளுக்கு பயிற்சி
-
விடுதிகளில் நடக்கும் குறைபாடுகள்: தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண்
-
மானாமதுரையில் வீடுகளில் தொடர் திருட்டு: குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
-
தேனி மாவட்டம் நிகழ்ச்சி