பிச்சாவரம் படகு குழாமில் பிரியாணி விற்பனை துவக்கம்

கிள்ளை: சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பிச்சாவரம் படகு குழாமில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சிக்கன் பிரியாணி விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், உலக புகழ்பெற்ற வனச்சுற்றுலா மையம் உள்ளது. இங்கு, இயற்கை சூழலுடன், மருத்துவம் குணம் கொண்ட சுரபுண்ணை எனும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்துள்ளதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு படகு சவாரி செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மதிய உணவுக்கு வெளியே செல்ல வேண்டியுள்ளதால், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு மற்றும்  விடுமுறை நாட்களில் மட்டும் ரூ. 99க்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் விற்பனையை நேற்று சுற்றுலா மைய மேலாளர் பைசல் அகமது துவக்கி வைத்தார். ரூ.99க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படுவதால், சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

 

Advertisement