கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பகுதியில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப்இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது, சி.என்.பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நடுவீரப்பட்டு கீழ்செட்டித்தெருவை சேர்ந்த கலைமோகன், 27; என்பவரிடம் சோதனை செய்தனர். அவரது பையில் 50 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதேபோல் அதே பகுதியில் நின்றிருந்த ராணிப்பேட்டை பூபாலன், 27; என்பவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுவாமி அபிஷேகத்துக்கு தீர்த்தம் மணிமுக்தாற்றில் உறைகிணறு
-
தாங்க முடியல... மது, கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம்
-
மண்ணில்லா விவசாயம்: விவசாயிகளுக்கு பயிற்சி
-
விடுதிகளில் நடக்கும் குறைபாடுகள்: தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண்
-
மானாமதுரையில் வீடுகளில் தொடர் திருட்டு: குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
-
தேனி மாவட்டம் நிகழ்ச்சி
Advertisement
Advertisement