மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
அன்னூர்: நாரணாபுரம் ஊராட்சி, வடுகபாளையத்தில் மாரியம்மன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி துவங்கியது.
விழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், முளைப்பாலிகை ஊர்வலம், கோபுரம் கண்திறத்தல் உள்ளிட்ட நிகவ்ச்சிகள் நடந்தன.
நேற்று முன்தினம், காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், இரவு 7:00 மணிக்கு பழனி ஆண்டவர் காவடி குழுவின் காவடியாட்டமும், ஜமாப்பும் நடந்தது.
நேற்று காலை 7:30 மணிக்கு, மாரியம்மன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், மூல கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
அனைத்து சுவாமிகளுக்கும் மகா அபிஷேகம், தச தரிசனம் நடந்தது. நாட்டுப்புற கோலாட்ட குழுவின் கலை நிகழ்ச்சி நடந்தது. மதியம் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுவாமி அபிஷேகத்துக்கு தீர்த்தம் மணிமுக்தாற்றில் உறைகிணறு
-
தாங்க முடியல... மது, கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம்
-
மண்ணில்லா விவசாயம்: விவசாயிகளுக்கு பயிற்சி
-
விடுதிகளில் நடக்கும் குறைபாடுகள்: தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண்
-
மானாமதுரையில் வீடுகளில் தொடர் திருட்டு: குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
-
தேனி மாவட்டம் நிகழ்ச்சி
Advertisement
Advertisement