900 சவரன் நகை மாயம்: மருமகன், தாய் மீது வழக்கு
கணபதி: கணபதி மாநகர் எஸ்.ஆர்.வி.நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகபாண்டியனின் இரண்டாவது மகளுக்கும், ஜோதிபுரத்தை சேர்ந்த விக்னேஷூக்கும் திருமணம் நடந்தது. இருவரும் டாக்டர்கள். சிறிது நாட்களில் தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அறியாத சண்முகபாண்டியன், லாக்கர் சாவியை மருமகனிடம் ஒப்படைத்தார்.
தகராறு முற்றியதில் மகள் பெற்றோர் வீட்டுக்கு திரும்பினார். மருமகனிடம் லாக்கர் சாவியை பெற்று லாக்கரை திறந்து பார்த்தார் சண்முகபாண்டியன். 1000 சவரன் நகை மாயமாகியிருந்தது. மருமகன் 100 சவரன் மட்டும் தந்தார். மீதி நகையை மீட்டுத்தர சண்முகபாண்டியன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். விக்னேஷ், தாயார் ஜீவிதா மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திண்டுக்கல், தேனி மாவட்ட இணைப்பு ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் சிரமம்
-
ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சி
-
வடிகால் கான்கிரீட் மூடி சேதம்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
-
இலங்கை சிறையில் வன்முறை; 25 பேர் உயிரிழப்பு
-
அடுத்த 3 மாதங்களில் மொபைல் 'ரீசார்ஜ்' கட்டணங்கள் உயர வாய்ப்பு
-
குடகனாற்றில் சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
Advertisement
Advertisement