அடுத்த 3 மாதங்களில் மொபைல் 'ரீசார்ஜ்' கட்டணங்கள் உயர வாய்ப்பு
புதுடில்லி: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது; சந்தை ஒருங்கிணைப்புக்குப் பிறகு கட்டணங்களை உயர்த்துவதற்கான சூழல் சாதகமாக மாறியுள்ளது. இதனால், அடுத்த 3 முதல் 4 மாதங்களில் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில், மேலும் 12 முதல் 15 சதவீத கட்டண உயர்வு இருக்கக்கூடும்.
வாடிக்கையாளர்கள் 2ஜி நெட்வொர்க்கில் இருந்து 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளுக்கு மாறுவதாலும், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களின் சேர்க்கையாலும், ஜூன் காலாண்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் காலாண்டு அடிப்படையில் 1 முதல் 1.5 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை ஈர்த்து, தங்களது சந்தை பங்கீட்டைத் தொடர்ந்து அதிகரிக்கும்.
அதேவேளையில், காலாண்டு அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 70 லட்சம் வாடிக்கையாளர்களையும், பார்தி ஏர்டெல் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களையும் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வோடபோன் ஐடியா வெறும் 2 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே சேர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்தது கனமழை: அடுத்தடுத்து நிலச்சரிவு; பஸ், ரயில் சேவை பாதிப்பு
-
பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அரசு கலைப்பு
-
அயோத்தி ராமர் கோவில் நிர்வாகிகளின் ராஜினாமா ஏற்பு! விசாரணை அறிக்கையை ஆய்வு செய்ய முடிவு
-
கட்டாய மத மாற்ற புகார்: ஐ.டி., பெண் ஊழியருக்கு ஜாமின்
-
இந்தோனேஷியா நாட்டில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
-
சிறுமி பாலியல் பலாத்காரம்; முதியவருக்கு '42 ஆண்டு'