வடிகால் கான்கிரீட் மூடி சேதம்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செலிவிமேடில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகாலின் இயந்திர நுழைவாயில் கான்கிரீட் மூடி சேதமடைந்துள்ளதால், பாதசாரிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

காஞ்சிபுரம் செவிலிமேடில் சாலையோரம், நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளி விளையாட்டுத்திடல் அருகில், சாலையின் தரைமட்டத்தில் உள்ள மழைநீர் வடிகாலின் இயந்திர நுழைவாயில் கான்கிரீட் மூடி சேதமடைந்துள்ளதால், திறந்த நிலையில் உள்ளது.

இதனால், சாலையோரம் நடந்து செல்லும் பாதராரிகள் சேதமடைந்த மழைநீர் வடிகாலின் இயந்திர நுழைவாயில் கான்கிரீட் மூடி பகுதியில் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, செவிலிமேடில் சேதமடைந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகாலின் இயந்திர நுழைவாயில் கான்கிரீட் மூடியை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement